வவுனியாவில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து

வவுனியாவில் இன்று (21.01.2017) காலை பழைய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இரு பேருந்துகள் மோதிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது,

கல்முனையிலிருந்து முல்லைத்தீவு செல்ல இருந்த  பேருந்தும் பழைய பேருந்து தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட  பேருந்தும் ஒன்றை ஒன்று மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.  

இரண்டு பேருந்துகளும் இ.போ.சபைக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

You might also like