கிளிநொச்சியில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று!

கிளிநொச்சி அக்கராயன்குளத்தை அண்மித்த கிராமங்களில் ஒன்றுதான் அமைதிபுரக் கிராமம்.

இந்த கிராமத்தை இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி நோக்கி படையெடுக்கும் போது முற்றும் முழுதாக அழித்து விட்டதாக அயல் கிராம பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

விவாசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட குறித்த கிராமத்து மக்கள் சொந்த உழைப்பில் பாடுபட்டு கட்டப்பட்ட மாளிகைகள் எல்லாம் யுத்தக் குண்டுகளால் அழிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணத்தினால் மன உளைச்சலடைந்த பிரதேசவாசிகள் மீள தமது ஊருக்கு திரும்ப மறுத்து வருகின்றனர்.

இறுதி யுத்தத்தின் பின்னர் குறித்த கிராமத்து மக்கள் மீளக் குடியேறுவார்கள் என்று நினைத்து கிறிஸ்தவ கெவிமாதா கோயில் ஒன்று அங்கு அமைக்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் அந்தக் கிராமத்திற்கு வரவே இல்லை.

அதனால் குறித்த கோயில் அழிந்து போன கிராமத்தின் நடுவே பிரதேச வாசிகளின் வருகைக்காக காத்து நிற்கின்றது.

விவசாயக் கிணறுகள் பல பாழடைந்தும் வீடுகள் பல நொறுங்கியும் பாடசாலை, ஆலயங்கள், பொது இடங்கள் அழிக்கப்பட்ட நிலையை காணும்போது கடந்த கால அரசாங்கம் தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழிக்கும் நடவடிக்கையினை செயற்படுத்திய விடயம் நிதர்சனமாகியுள்ளது.

You might also like