கிளிநொச்சி அக்கராயன்குளத்து விவசாயிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்

கிளிநொச்சி – அக்கராயன்குளத்து நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கிளிநொச்சி விவசாயத் திணைக்களமும் இக்குளத்தின் கீழான விவசாய அமைப்புகளும் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்கராயன்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சுமார் 4,500 ஏக்கர் வரையான காலபோக நெற்செய்கைக்கு தற்போது நீர்ப்பாசனம் இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, குளத்தின் வலதுகரை வாய்க்கால் மூலமாக உருத்திரபுரத்தின் நீவில் பகுதியிலுள்ள 1,200 ஏக்கர் வரையான வயல் நிலங்களுக்கும் நீர் விநியோகம் நடைபெறும் நிலையில் குளத்தின் நீரை வயல்களுக்கு சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் நீர் வீண்விரயம் ஏற்பட்டு கழிவு ஆறுகள் மூலம் நீர் வெளியேறாமல் விவசாயிகள் நீரைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்திலே இரணைமடு குளத்தின் கீழான நெற்செய்கை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து நீர்ப்பாசன முயற்சிகள் நெற்பயிர்களுக்கு மிகுந்த திட்டமிடல்களுடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like