வவுனியா வடக்கில் யானைகளினால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் : ஜி.ரி.லிங்கநாதன் கொழும்புக்கு கடிதம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி மற்றும் செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களில் யானைகளினால் பல உயிரிழப்புகள் அதிகரித்து வருவதுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பயிர்கள் சேதங்களுக்கு உள்ளாகி  உடைமைகளையும் இழந்து மிகவும் ஆபத்தான நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் வனஜுவராசிகள் அலுவலகம் ஒன்றை திறந்து யானைகளினால் வருகின்றன இடரினை தடுக்கும் முகமாக மின்சார வேலி அமைத்தல் , தற்காப்பு உபகரணங்களை கையளித்தல் (யானை வெடி) போன்றவற்றிற்கான நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு வட மாகாண  சபை உறுப்பினர்  ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினால் வனஜுவராசிகள் அமைச்சர் கெளரவ. ஜெய விக்ரம பெரேரா அவர்களுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like