வவுனியா ஈச்சங்குளத்தில் சட்டவிரோதமாக மரம் கடத்திய இருவர் கைது

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று (30.09.2017) சட்டவிரோதமாக மரம் கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈச்சங்குளம் கரப்பங்குளம் குள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரிய ரத்ன அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் துணை இன்ஸ்பெக்டர் நிமால்சிறி அவர்களின் தலமையில் பொலிஸ் கொஸ்தபர்களான மதுர 40849 , குமார 61533 , தர்சநாயக்க 87250 , பாரதிராஜா 73919 , குமார 33787 ஆகியோர்களினால் இன்று ( 30.09.2017) மதியம் 1.00மணியளவில் கடத்தலில் ஈடுபட்ட கருவேப்பங்குளம், தரணிக்குளம் ஆகிய பகுதியை சேர்ந்த 27வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெட்டு இயந்திரம் ,  சிறிய ரக உழவு இயந்திரம் , ரூபா ஒரு லட்சம் பெறுமதியான மதுர மரக்குற்றிகள் 30 என்பற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

You might also like