வவுனியா தரணிக்குளம் பாதை செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

வவுனியா தரணிக்குளத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய கௌரவ. செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் ஒரு கிலோ மீற்றர் பாதையினை செப்பனிடும் பணிகளை நேற்று (29.09.2017) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சின் இணைப்பு செயலாளர் நாகராஐன், முன்னாள் தெற்கு பிரதேச சபை உப தலைவர் ரவி, வீதி செப்பனிடும் ஒப்பந்தகாரர் பரமேஸ் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like