தேர்தலுக்கு முன்னர் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு

எந்தவொரு தேர்தலுக்கும் முன்னதாக புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள கருத்துக் கணிப்பொன்றை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

தேர்தல்களுக்கு முன்னரே அவ்வாறான கருத்துக் கணிப்பொன்றை நடத்திவிடுவதே சிறந்தது என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகளும் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் துரித கதியில் நிறைவு செய்து, வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு நடந்தவுடன் கருத்துக் கணிப்பொன்றை நடத்துவதே அரசாங்கத்தின் திட்டம் என்றும் கூறப்படுகின்றது.

அவ்வாறு கருத்துக் கணிப்பொன்றை நடத்த அரசாங்கம் தீர்மானிக்கும் பட்சத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்படலாம் என்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You might also like