வவுனியா பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது

வவுனியா பேருந்து நிலையத்தில் அரச அனுமதியற்ற சட்ட விரோதமான புகையிலை பெட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு உப பரிசோதகர் டே.திணேஸ் தலைமையின் கீழ் வவுனியா பேருந்து நிலையத்தில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இதன்போது, சட்ட விரோதமான 800 புகையிலை சுருள் அடக்கிய 40 புகையிலை பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like