வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறுவர் தின விழா

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று (01.10.2017) காலை 9.30மணியளவில் பாடசாலையின் அதிபர் ப.கமலேஸ்வரி அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் சலலிகினி சிறுவர் கழக மாணவிகளின் பூஜா நடனம், குழு நடனம், கரகாட்டம், குழுப்பாடல் , சிறுவர் விளையாட்டு நிகழ்வுகள் , பரிசில் வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார , கௌரவ விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ,வட மாகாண சபை உறுப்பினர் , அதிதிகளாக வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like