கிளிநொச்சியில் தற்காலிகமாக நீர் விநியோகம் இடைநிறுத்தம்

கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழான குளங்களின் நீர் விநியோகம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மழை பெய்து வருவதன் காரணமாக, இரணைமடு, அக்கராயன்குளம், கரியாலைநாகபடுவான், குடமுருட்டி, புதுமுறிப்பு, கல்மடு, கனகாம்பிகைக்குளம், பிரமந்தனாறு, வன்னேரிக்குளம் ஆகியவை உள்ளிட்ட சகல குளங்களின் நீர் விநியோகம் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் சனிக்கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வரட்சியான சூழ்நிலையிலும் இக்குளங்களில் இருந்து நீர் விநியோகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like