சிறப்பாக நடைபெற்ற வவுனியா நகர சிறுவர், முதியோர் தின நிகழ்வு

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு வவுனியா நகர முதியோர் சங்கத் தலைவர் தா.சலசலோசன் தலைமையில் கிராம அலுவலர் அலுவலகத்தில் இன்று (01.10.2017)  காலை நடைபெற்றது.

வவுனியா நகர சிறுவர், முதியோர் தின நிகழ்வில் நகர கிராம அலுவலர் செல்வராசா, வவுனியா நகரசபை முன்னாள் நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன், பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஜெகசோதிநாதன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளர்.

இதன்போது, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் முதியோர்களின் எதிர்காலம் தொடர்பில் கருத்துரைகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

You might also like