வவுனியாவில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் நடைபவணி

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நேற்று (01.10.2017) மதியம் 2.30 மணியளவில் வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி வவுனியா கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்தது.

வவுனியா கலாச்சார மண்டபத்தில் விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த இந் நிகழ்வில் மத தலைவர்கள் ஆசியுரை , வரவேற்பு நடனம், வரவேற்பு நிகழ்ச்சி, சிறுவர்களின் உரை, பலே நடனம், கயிறிழுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல், நாட்டிய நாடகம், நடனம், பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

விமலன் (கே.என்.எச்) தலமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான், பதுளை பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், மொறகொட தமனந்த தேரோ, அருட்பணி. சத்தியராஜ், பிரபாகர குருக்கள், மௌலவி.ஜோசுவா, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் இமல்டா சுகுமார், வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராஜா, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரேலியா, மெரட்டுவ, நீர்கொழும்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் , தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like