அரிசி, தேங்காய் 100 ரூபாய் மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? வவுனியாவில் துண்டுபிரசுரம்

அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய் மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? மற்றும் பொருள் விலையும் – வரிச் சுமையும்,  கடன்களும் – பில்லுகளும் தாங்க முடியவில்லை சம்பளத்தினை கூட்டு என்ற வாசகத்தினை தாங்கிய வண்ணம் வவுனியா நகர் முழுவதும் முன்னிலை சோஷலிஸக் கட்சியினரால் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ், சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இவ் சுவரோட்டிகள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே ஒட்டப்பட்டுள்ளது.

இச் சுவரோட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வளர் சந்திரகுமார் கண்ணன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இந்த விலைவாசி ஏற்றமானது தற்போது எல்லையற்று அதிகரித்து காணப்படுகின்றது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட மத்திய வர்க்கத்தினையும் அரசாங்கத்தினையும் மிக மிக பாதித்துள்ளது. உண்மையிலேயே நல்லாட்சி வந்த பிற்பாடு இந்த பொருட்களின் விலையேற்றம் மிக கடுமையாக காணப்படுகின்றது.

உண்மையிலேயே தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்களும் சரி ஏழை மக்களும் சரி இந்த தேங்காய் உணவு பொருட்களில் அத்தியவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. அரிசியும் தேங்காயும் தான் கஞ்சி விற்று குடிப்பதாகவிருந்தாலும் அரிசியும் தேங்காயும் தான் தேவைப்படுகின்றது. அதுக்கு கூட வழியில்லாமல் செய்துள்ளது இந்த நல்லாட்சி அரசாங்கம்

அந்த வகையிலேயே மிகவும் வண்மையாக கண்டிக்கின்றேன். உண்மையிலேயே அரசாங்க ஊழியர்களின் சம்பளம் போதாமல் உள்ளது. சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் .கூலித்தொழிலாளிகளுக்கு கூலி அதிகரிக்கப்பட வேண்டும் . அத்தியவாசிய பொருட்கள் கட்டுப்பாட்டான விலை விலை நிர்னையத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும்.

மக்களுக்கு சிரமமில்லாமல் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இச் சுவரோட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வளர் மாணிக்கம் ஜெகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் நிலவுகின்ற வரட்சியான காலப்பகுதியில் பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதால் சாதாரணமான வாழ்க்கை வாழும் மக்களுக்கு பெரும் சுமையினை இது வழங்கியுள்ளது.

உண்மையிலேயே மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நாங்கள் நம்பி வாக்களித்த இந்த அரசாங்கம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்தவோரு அக்கறையுமின்றி செயற்படுவது போன்றே தெரிகின்றது.

ஆரம்பத்தில் ஒரு ஆட்சி மாற்றத்திற்காக சகல விலைகளையும் குறைத்த இந்த அரசாங்கம் இப்போழுது அந்த மக்கள் அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கு எந்த விதமான ஒரு அக்கறையும் செலுத்தாத ஒரு நிலையே காணப்படுகின்றது. விவசாய உற்பத்திகள் வெகுவாக குறைவடைந்துள்ளது.

ஆகவே இந்த அரசாங்கம் உடனடியாக வறுமை நிலையிருக்கின்ற அன்றாட வாழும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள், மீள் குடியேறிய மக்கள் , அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்ல கஸ்டப்படுகின்ற இந்த சூழ் நிலையில் இந்த அரசாங்கம் இவ்வாறான சமூகத்திற்கு புறன்பான விலையேற்றத்தினை ஏன் அங்கிகரித்து என தெரியவில்லை.

இந்த மாற்றத்தினை உடனடியாக இந்த அரசாங்கம் தலையிட்டு சாதாரண மக்களின் வாழ்வை சிறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக விரைவில் பட்டினியால் சாவு வரும் என்ற நிலை தான் இருக்கின்றது. இதனை இந்த அரசாங்கம் கட்டாயம் நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

You might also like