வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்று (02.10.2017) பாடசாலையின் அதிபர் எஸ்.பாலச்சந்திரன் தலமையில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன் தமிழ் செ.ஸ்ரீநிவாசன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வுகளில் விசேட விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன் தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் மாணவர்களுக்கு மூத்த குடிமக்கள் தொடர்பான விழுமியப் பண்புகள் தொடர்பில் உரை நிகழ்த்தினார் .

மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்காக பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன

You might also like