வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேரூந்தின் ஊழியர் தாக்குதல்

 வவுனியா புதிய மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் இன்று ( 22.01.2017) மாலை 5.30மணியளவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேரூந்தின் ஊழியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு நுழைய முற்ப்பட்ட இ.போ.ச பேரூந்தினை கடமையிலிருந்த இ.போ.ச பாதுகாப்பு உத்தியோகத்தர் வாயிலை திறக்க முற்பட்ட சமயத்தில் வாயிலை திறக்க வேண்டாமேன தனியார் பேரூந்தின் ஊழியரோருவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பேரூந்து ஊழியரின் வார்த்தையினை பொருப்படுத்தாது வாயிலை திறந்தமையினையடுத்து ஆத்திரமடைந்த தனியார் பேரூந்தின் ஊழியர் கடமையிலிருந்த  இ.போ.ச பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலில் சிறு காயங்களுக்குள்ளான இ.போ.ச பாதுகாப்பு உத்தியோகத்தர் ( விமர் சேகர (வயது-42) ) என்பவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் பேரூந்தின் சங்கத்தலைவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்ப்படுத்திய போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like