வவுனியா பாரதிபுரத்தில் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரி போராட்டம்

வவுனியா நகரிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கிராமமான பாரதிபுரம் கிராமத்தில் 1983ம் ஆண்டு பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்ட பாரதிபுரம் பாரதி வித்தியாலயம் பாடசாலையில் தரம் 1தொடக்கம் 5 வரை காணப்படுகின்றது.

இப் பாடசாலைக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் வருகின்ற போழுதும் கிராமப்புர பாடசாலையாக காணப்படுவதாலும் நகரிலிருந்து பல கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருப்பதாலும் சில மாதங்களிலேயே அவர்களை மீண்டும் வேறோரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாவும் தற்போது இப் பாடசாலையில் பணிபுரிகின்ற அதிபருக்கு வவுனியா வலயக்கல்வி பணிமணையினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கு மாணவர்கள் சழூகமளிக்காது காலை 7.45மணியளவில் பாடசாலை வாயிலுக்கு முன்பான மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இணைந்து சுமார் 30நிமிடங்களுக்கு மேல் எமது அதிபரை எமக்கு தா? அதிபரை இடமாற்றாதே என பல்வேறு கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்தனாயக்கா தலமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாடசாலை சமூகத்தினரிடமும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் சுமார் 20நிமிடங்களாக கலந்துரையாடி போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதனையடுத்து மாணவர்கள் பாடசாலைக்கு சென்றனர்.

இப் பாடசாலையில் 7நிரந்தர ஆசிரியர்களும் 2 தொண்டராசிரியர்களும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ..இராதகிருஷ்ணனிடம் தொலைபேசியுடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,

குறித்த அதிபரிடன் சம்மதத்துடனேயே அவருக்கு வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு உப அதிபராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் கடந்த சில வருடங்களுக்கு முன் பாடசாலை மாணவி தற்கொலை செய்தமை தொடர்பாக அவருக்கு வவுனியா பாரதிபுரம் பாரதி வித்தியாலயத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

தண்டணையின் அடிப்படையில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த அதிபரை வேறு பாடசாலைக்கு ஜந்து வருடத்துக்குள் இடமாற்றம் செய்ய முடியும். குறித்த அதிபர் பாரதி வித்தியாலயத்தில் தான் கடமையாற்ற விருப்பம் என தெரிவித்தார். அவரை அந்த பாடசாலைக்கே மீண்டும் வழங்க தயார் என தெரிவித்தார்.

You might also like