வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரூந்துகள் இன்றியும் வியாபார நிலையங்களில்  மக்கள் இன்றியும் வெறிச்சோடிக்காட்சியளிக்கும் அரச பேரூந்து நிலையத்தில் இன்று காலை வியாபார நிலையத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் கிரிக்கட் விளையாட்டில்  ஈடுபட்டு வருவதைக்காணக்கூடியதாக உள்ளது.

வவுனியாவில் புதிய பேரூந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டதிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பேரூந்து சேவைகள் புதிய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்று வருகின்றன.

உள்ளுர் சேவைகள் மட்டுமே அரச பேரூந்து நிலையத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன் காரணமாகவே பொதுமக்கள், பேரூந்துக்கள் இன்றி காட்சியளிக்கும் அரச பேரூந்து நிலையத்தில் இளைஞர்கள் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like