வவுனியா மாவட்ட செயலகத்தில் மரம் முறிந்து விழுந்து அரச வாகனம் சேதம்

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (02.03.2017) மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்ரக வானமோன்றின் மீது மரம் முறிந்து வீழ்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த வாகனம் வவுனியா மாவட்ட செயலக வாகன தரிப்பிடத்தில் தரித்து நிற்காது மாவட்ட செயலக வளாகத்தில் அரச மரமோன்றில் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று வவுனியாவில் வீசிய காற்றின் காரணமாக மரத்தின் கொப்பு முறிந்து வீழ்ந்ததில் குறித்த வாகனம் பகுதியளில் சேதமடைந்துள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் வாகனங்களை கொள்வனவு செய்யும் அரச திணைக்களங்கள் இவ்வாறு அசமாந்தபோக்காக வாகனங்களை தரித்து வாகனங்களை சேதமாக்குவது ஏன்? மாவட்ட செயலகத்தில் வாகன தரிப்பிடம் ஏன்?  கேள்விக்கு பதில் இல்லை

You might also like