வவுனியாவில் அரசியலை பயன்படுத்தி வேலைக்கு செல்லாத சமுர்த்தி உத்தியோகத்தர் மீது விசாரணை

வவுனியாவில் முன்னாள் வடமாகாண அமைச்சர், பாராளுன்ற உறுப்பினர்களின் செல்வாக்கினை பயன்படுத்தி வேலைக்கு செல்லாத சமூர்த்தி உத்தியோகத்தர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்ஸிம் சமுகத்தை சேர்ந்த மத்திய அமைச்சரின் துணையுடன் சமுர்த்தி வேலைக்கு சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தரோருவர் வவுனியா நெடுங்கேனி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரிவில் கடமையாற்றினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவத்தினால் வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் வீட்டுத்திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட குறித்த உத்தியோகத்தர் தொடர்பில் மக்கள் முறையிட்டமையினையடுத்து வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் கொழும்பு சமுர்த்தி தலமைக்காரியாலயத்தினால் விசாரணைகள் இடம்பெற்றன

இந் நிலையில் குறித்த உத்தியோகத்தரை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார அவர்களின் வேண்டுகொளிற்கு இனங்க வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட அரசியல்வாதிகள், முன்னாள் வடமாகாண அமைச்சர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி மீண்டும் வெளிக்கள உத்தியோகத்தராக வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒமந்தைக்கு இடமாற்றம் பெற்று சென்றார்.

எனினும் குறித்த உத்தியோகத்தர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் எவ்வித முன் அறிவித்தலுமின்றி கடமைக்கு செல்லாமையினால் ஒமந்தை சமுர்த்தி வங்கி பணிப்பாளர் மூலம் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து வவுனியா பிரதேச செயலாளர் வவுனியா மாவட்ட செயலக சமுர்த்தி பணிப்பாளருக்கு குறித்த உத்தியோகத்தர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி கடமைக்கு சமூகமளிக்கவில்லை. இவ் விடயத்தினை தங்களுக்கு அறியத்தருவதாக தெரிவித்து கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா தெரிவித்தார்.

You might also like