வவுனியா செட்டிக்குளத்தில் தமிழரசுக்கட்சியின் செயற்குழு விசேட கலந்துரையாடல்

இலங்கை தமிழரசுக்கட்சியின் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச கிளையின் செயற்குழு அங்கத்தவர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று (02.10.2017)  செட்டிகுளம், துட்டுவாகை பகுதியில் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும், தற்போதைய மாகாணசபை உறுப்பினருமாகிய Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் திரு.சி.சிவசோதி, கட்சியின் இளைஞர் அணி பிரதிநிதியும், கெளரவ Dr.ப.சத்தியலிங்கம் அவர்களின் இணைப்பாளருமாகிய திரு.பாலச்சந்திரன் சிந்துஜன், செட்டிகுளம் பிரதேச கிளையின் தலைவர் திரு.ராஜா மற்றும் பல செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சமகால அரசியல் நிலைமை, கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், செட்டிகுளம் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல முக்கிய பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

You might also like