புலமைப் பரீட்சைப் பெறுபேறு: வவுனியா மாவட்டத்தில் இருவர் முதலாமிடம்

வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தை சேர்ந்த இருவர் முதலாமிடம் பெற்றுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளரின் மகளான உதயராசா அவிர்சாஜினி மற்றும் ஜெயக்குமார் லெவீந் ஆகிய இருவருமே 190 புள்ளிகளை பெற்று முதலாமிடம் பெற்றுள்ளனர்.

இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த இவ் இரு மாணவர்களும் ஆசிரியை லெனின் இராஜேஸ்வரியின் மாணவர்களாவர். நேற்று இரவு வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இருவர் முதலாமிடத்தினை பெற்றுள்ளதுடன், மூன்றாமிடத்தினை புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தை சேர்ந்த வி. ரவிசாந் 186 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

You might also like