வவுனியா வடக்கில் புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவன் மாவட்ட நிலையில் மூன்றாம் இடம்!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் வி.ரிசான் 186 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 3வது இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கமலாம்பினை சொக்கலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த மாணவனை இந்த பெறுபேறு பாடசாலை வரலாற்றிலே முதற்தடவையாகும் . 55 மாணவர்கள் புலமைப்பரிட்சைக்கு தோற்றியிருந்தனர். இதில் 24 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 26 மாணவர்கள் 100க்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

186புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாவது இடத்தினை பெற்ற மாணவன் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவன். தனது வருமையினை பொருற்படுத்தாது. அவரது அயராத முயற்சியினால் புலமைப்பரிட்சையில் திறமைச் சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

You might also like