வவுனியாவில் பலத்த காற்றுடன் கூடிய மழை : போக்குவரத்து தடை

வவுனியாவில் இன்று (05.10.2017) மாலை 4.00மணியளவில் பெய்த காற்றுடன் கூடிய மழையினால் தாலிக்குளம் பகுதியில் பழமை வாய்ந்த மரமோன்று முறிந்து வீழ்ந்ததில் வவுனியா – மன்னார் வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டது.

இது வரை முறிந்து வீழ்ந்த மரத்தின் கிளைகள் அகற்றப்படாமையினால் வாகனங்கள் வீதியில் கீழே இறங்கி மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலே செல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

பலமுறை வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு அறிவித்தும் இதுவரை எவரும் சமூகமளிக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

You might also like