முல்லைத்தீவு இராணுவமுகாமிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் – ஒட்டுசுட்டான் நகரின் மத்தியில் முத்து ஐயன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான இராணுவத்தினரின் முகாமிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் அந்தப் பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் பிரதேச சபை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், முல்லைத்தீவில் உள்ள 64 ஆவது படைப்பிரிவு முகாமில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் மக்கள் பாதிப்பை எதிர் நோக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீதியால் பயணிப் போர் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் சுகாதாரச் சீர்கேடுகளும் ஏற்படுகின்றதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, பிரதேச சபை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கழிவு நீரை வீதியில் பரவவிடுவது குற்றமாகும். இது இராணுவத்தினருக்கும் பொருத்தும். இது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை. ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like