கூலித்தொழில் செய்து மகனை படிக்க வைத்த தந்தை! சாதனை படைத்த மகன்

மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட முறாவோடை தமிழ் சக்தி வித்தியாலய மாணவன் கல்குடா வலயத்திலேயே முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இவர் கல்குடா வலயத்தில் 182 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

முறாவோடை தமிழ் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் பிரதீபன் நிதுர்ஜன் எனும் மாணவனே இவ்வாறு சித்தியடைந்தார்.

இது தொடர்பில் மாணவனின் தந்தையான பிரதீபன் கருத்து தெரிவிக்கையில்,

“நான் மிகவும் கஷ்டப்பட்டு, கூலிக்கு பால் இழுத்து, எனது மகனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்து படிக்க வைத்தேன்.

மேலும் எனது மகனுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும், அதிபர் சா.சுதாகரன் அவர்களுக்கும் இறைவனுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

You might also like