​வவுனியாவில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் வழிகாட்டல் கருத்தரங்கு!!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களினால் வருடந்தோறும் நடாத்தப்படும் கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித விஞ்ஞான பாடத்திற்கான வழிகாட்டல் கருத்தரங்கு வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் (05/10) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு கல்வி வலையத்யிற்குட்பட்ட கல்மடு மகா வித்தியாலயத்தில் ஆரம்ப நிகழ்வு கருத்தரங்கு தொடரின் தலைவர் பா.நிரூஜன் தலைமையில் நடைபெற்றது. 

வழிகாட்டல் கருத்தரங்கிற்கு இணை அனுசரணை வழங்கிய வவுனியாவில் இயங்கும் ஆடைத்தொழிற்சாலையான ஒமேகா லைன் தனியார் நிறுவனத்தின் திட்டமிடல் திணைக்கள தலைவரும் பல்கலைக்கழக பழைய மாணவருமான மௌளிதாசன் மற்றும் மனித வள முகாமையாளர் அன்ரன், பாடசாலை ஆசிரியர் பிரசாந்த், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அனுசரணை வழங்கிய  தனியார் நிறுவனத்திற்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் கருத்தரங்கு நடைபெற்றது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் தொடர்ச்சியாக 07 வருடங்களாக 14 மாவட்டங்களில் 10,000 பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like