வறுமையிலும் சாதனை படைத்த தமிழ் மாணவி! குவியும் பாராட்டுக்கள்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேச மகா வித்தியாலய மாணவி கதிரவன் விபுணா, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 186 புள்ளிளைப் பெற்று போரதீவுக் கல்விக்கோட்டத்தில் முதலாம் இடத்திலும் மாவட்டத்தில் ஒன்பதாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவி விபுணாவின் தந்தை கதிரவன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

வறுமையை பொருட்படுத்தாமல் சாதனை படைத்த மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த மாணவிக்கு ஆசிரியை சாந்தநிதி அற்புதராஜா கற்பித்தல் செயற்பாடுகளில் வழிகாட்டியாக முன்னின்று செயற்பட்டுள்ளார்.

You might also like