கிளிநொச்சியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சியில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு 12,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா  பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச்சென்ற ஒருவரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபருக்கு 12,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like