யாழிலிருந்து கிளிநொச்சி சென்ற இரு இளைஞர்களுக்கு பாம்பு கொடுத்த அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி இளைஞர்கள் இருவர் வெங்கிளாந்தி பாம்புடன் மோதி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த இளைஞன் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து A9 பிரதான வழியூடாக கிளிநொச்சி நோக்கி நாங்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தோம்.

அதன்போது முகமலை பகுதியில் ஒரு பெரிய பாம்பு திடீரென வீதியை ஊடறுத்து செல்ல முயன்றது.

நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை பாம்பில் மோதி விடாமல் விலகிச்செல்ல நாங்கள் முயற்சித்தோம்.

எனினும் பாம்பை கண்ட பதற்றத்தினால் அது முடியவில்லை அப்பொழுது பாம்புடன் மோதிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விழுந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like