அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள பூநகரி மக்கள்

கிளிநொச்சி – பூநகரி, பாலாவி கிராமத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் உள்ள பாலாவி கிராமத்தில் கடல் தொழிலை நம்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன.

கடந்த காலயுத்தம் காரணமாக இப்பகுதியில் உள்ள மக்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களுக்கும் சென்றுள்ள போதும், கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆறு குடும்பங்கள் நிரந்தரமாக மீள்குடியேறியுள்ளன.

இதேவேளை 15 வரையான குடும்பங்கள் தொழில் கருதி இங்கு வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் குறித்த கிராமத்திற்கான பிரதான வீதி இன்றுவரையில் புனரமைக்கப்படாமல் காணப்படுகிறது.

இதனால் இங்குள்ள மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அத்துடன், குடிநீர் விநியோகம் பூநகரி பிரதேச சபையினால் 15 நாட்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பகுதி மக்கள் மீனவர்களாகிய தாங்கள் வாழ்வாதாரத் தொழில் கருதி இங்கு இருப்பதனால் தமது தேவைகளை நிறைவு செய்து தருமாறும், மீனவர் ஓய்வு மண்டபம் ஒன்றினை அமைத்துத் தருமாறும் கோரியுள்ளனர்.

You might also like