கிளிநொச்சியில் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய மூவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கிளிநொச்சியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய மூன்று வர்த்தகர்களுக்கு 7000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் நகரை அண்மித்த பகுதிகளில் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில், காலவதியான இனிப்பு வகைகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமைக்கு 3000 ரூபா தண்டப்பணமும், காலாவதியான வாசனைத் திரவியத்தினை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் தலா 2000 ரூபா வீதம் 4000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like