வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை வெளியேற்ற பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி

வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் இன்று (23.01.2017) காலை உண்ணதவிரதம் மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகளை அவ்விடத்திற்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நடைபாதையில் அமர்ந்து பொதுமக்களுக்கு. இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்ததுடன் அவ்விடத்தில் உண்ணதவிரதம் இருப்பவர்களால் போடப்பட்ட கொட்டகையையும் அகற்றுமாறும் அல்லது நகரசபை செயலாளரிடத்தில் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டதை அதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் பொலிசார்ருடன் கலந்துரையாடியும் பொலிசார் அனுமதியளிக்கவில்லை.

பின்பு நகரசபை செயலாளரை சம்பவ இடத்திற்கு அழைத்து பொலிசாருடன் கலந்தரையாடப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவபர்களினால் இடையூறு ஏற்பட்டால் தான் பொறுப்பேற்பதாகவும் பொலிசாருக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது.

நகரசபை செயலாளர் அனுமதியளித்துள்ளபோதும் பொலிசாரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.

எனினும் கொட்டகை அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றது.

You might also like