வவுனியா கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் முதியோர் விழிப்புணர்வு செயல் திட்டம்

வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றாகிய கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் முதியோர் விழிப்புணர்வு செயல் திட்டம் இன்று (06.10.2017) கல்லூரி அதிபர் திரு கேசவன் இளங்கோவன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் மூத்தோர் பற்றிய விழுமியங்கள் பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் . அருகிச்செல்லும் விழுமியப்பண்புகளை மாணவர் மத்தியில் மீண்டும் ஏற்படுத்துவதற்காக ‘ பெரியோரைத்துணைக்கோடல் ‘ என்னும் தலைப்பில் உரை நிகழ்திதனார் .

நிகழ்வில் கனடா புன்னகை அமைப்பின் உதவியூடாக கல்லூரி அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மின்சாரம் இல்லாத கிராமத்தில்; இருந்து கற்க வரும் மாணவர்களுக்கு கற்க வசதியாக சூரிய சக்தியில் இயங்கும் மின்விளக்குகள் வழங்கப்பட்டன. செல்வன் கிருசாந்தன் , செல்வன் சாகீசன் , செல்வி துர்க்கா ஆகியோருக்கு பாடசாலை அதிபரால் இவை வழங்கி வைக்கப்பட்டன.

You might also like