மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் நடந்தது என்ன? முழுமையான விபரம் உள்ளே..

கனம்
செய்தி ஆசிரியர்
நியூஸ் வன்னி. கொம்

பேரன்புடையீர்

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சித்திரவதையா? என்ற செய்தியைத் தாங்கள் பிரசுரித்தது கண்டு அதிர்ச்சியடைந்தோம்

430க்கு மேற்பட்ட குழந்தைகளைப் பராமரித்து வரும் இல்லத்தில் இரண்டு மாணவர்கள் மோசமான நடத்தைப் பிறழ்வாகச் செயற்பட்டு எமது பெண் குழந்தைகள் மூவரைப் பலவந்தப்படுத்தி காதல் கடிதம் எழுதச் சொல்லி வற்புறுத்தியதுடன் எமது பெண்பிள்ளைகளுக்கு பாடசாலையில் வைத்து அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக கிளி/ இந்துக் கல்லூரி அதிபர் அவர்கள் இவர்களை அழைத்து வந்து எம்முன் விசாரித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. பின்பும் இவர்கள் தொடர்ந்ததால் பெண் பிள்ளைகள் பாடசாலை போக மறுத்தனர்.

யாம் இது பற்றி சிறுவர் நன்னடத்தைக்கு இந்த இரண்டு மாணவர்களையும் வைத்திருக்க முடியாது எனவும் உடன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்புமாறும் கோரினோம். சிறுவர் நன்னடத்தை அதிகாரியும் கூட 28.09.2017ல் வந்து பேசி எச்சரித்துச் சென்றார்.

பின்பு இவர்களை நிறுத்திவிட்டு பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினோம். 04.10.2017ல் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்திற்கு குழப்படிகாரர்களை குடும்பத்துடன் இணைக்க அனுப்பினோம். அவர்கள் மீண்டும் எமது இல்லத்திற்கே திருப்பி அனுப்பினார்கள்.

இவர்கள் 3 நாள் வேலைக்களம் அது தமக்குப் பொருத்தமில்லை என பாடசாலை செல்லவில்லை. கிளி/இந்துக் கல்லூரி அதிபருக்கு இது தொடர்பில் அறிவித்தோம். இவர்கள் பாடசாலை போக மறுத்ததும் இவர்களை குடும்பத்துடன் இணைக்குமாறு கடிதம் எழுதினோம்.

இவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கும் போது எமது இல்லத்தில் வளர்ந்து வரும் இளம் தென்னையில் இளநீர் களவாகப் பிடுங்கி 5 பேருக்கு மேல் குடித்தபோது சக மாணவர் ஒருவர் கண்டு பேசிய போது அவரை இவர்கள் மோசமாகத் தாக்கியதால் அவர் இவர்களை தாக்கியதாக தற்போது 05.10.2017ல் தான் எமக்குக் கூறினர்.

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் முன் இன்று நடந்த விசாரணையில் அடிவாங்கிய மாணவர்கள் தங்களை எந்த அதிகாரியோ விடுதி அதிபரோ தாக்கவில்லை எனவும் மாணவனே தாக்கியதாகவே நேரில் கூறியுள்ளனர்.

மாணவர்களுக்கு இடையில் அடிபாடு நடந்தமை பற்றி எவருமே நிருவாகத்திற்கு அறிவிக்கவில்லை.

இது மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற ஒரு சம்பவம் எமது விடுதிப் பொறுப்பாளரோ வேறு அதிகாரிகளோ இந்த முறைப்பாடு செய்த மாணவர்களால் சுட்டிக்காட்டப்படவில்லை.

பல்கலைக்கழக மாணவனுக்கும் மற்றும் பெண் பிள்ளைகளுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட மாணவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பிரச்சினையேயாகும். எமது ஊழியர்கள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை.

எமது இல்லத்தில் உள்ள எந்தவொரு குழந்தைக்கும் அடிக்கக் கூடாது என சகல ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கிய எமது கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் வந்து விசாரித்தபோது மாணவன் தான் அடித்ததாக முறைப்பாட்டாளர்களே கூறியுள்ள நிலையில் அதிகாரிகள் அடித்ததாக தகவல் தந்தவர்கள் தவறான நோக்குடன் ஆதரவற்ற 430 பிள்ளைகளுக்கு மேல் பராமரித்து வரும் எமக்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்தியைத் தங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

எந்தக் குழந்தையையும் துன்புறுத்த யாம் இல்லம் நடத்தவில்லை. இவர்களை நல்ல பிரசைகளாக்கவே முயல்கின்றோம்.

தற்போது யாம் 2 பட்டயக் கணக்காளர்களையும் 10 பட்டதாரிகளையும் 1 விவசாயப் பட்டதாரியையும் உருவாக்கியுள்ளோம். அடுத்த ஆண்டுகளில் பல விஞ்ஞான மருத்துவப் பட்டதாரிகள் உருவாகுவர்.

தயவு செய்து இதனைப் பிரசுரித்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்

தி.இராசநாயகம்
தலைவர்
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்
ஜெயந்திநகர், கிளிநொச்சி

தொடர்புடைய செய்தி :-

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் சிறுவனுக்கு நடந்த கொடூரம் : தந்தை குமுறல்

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் சித்திரவதையா?

 

 

You might also like