வடமாகாண சபை உறுப்பினர் திடீர் இராஜினாமா

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர்  தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 மாகாண சபை தேர்தலில் சில வாக்குகள் குறைவாக கிடைத்தமையினால் மற்றுமொரு உறுப்பினரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாக ரிப்கான் பதியுதீன் குறிப்பிட்டார்.

இதனால் தனக்கு அடுத்ததாக வாக்குகளை பெற்றுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அலிகான் ஷரீப்பிற்கு வடமாகாண சபை உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடமாகாண சபையின் உறுப்பினராக தன்னைத் தெரிவு செய்த மன்னார் மாவட்ட மக்களுக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

You might also like