வவுனியா பலாமைக்கல் பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம் : மாணவர்கள் மீது தாக்குதல் முயற்சி

வவுனியா நெளுக்குளம் பலாமைக்கல் பகுதியில் ஆலயத்திற்கு சென்ற மாணவர்கள் மீது இன்று (07.10.2017) மதியம் 12.30மணியளவில் இளைஞர் குழுவோன்று தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் தொழிநூட்ப கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு மாணவனும் 5மாணவிகளும் இணைந்து  பாலமைக்கல் கிராமத்திலுள்ள ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் எங்கே செல்கின்றீர்கள்? என வினாவியுள்ளனர். இதன் போது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கிடையே சில கருத்து முரன்பாடுகள் இடம்பெற்றன.

இதனையடுத்து அந்த மாணவர்கள் மீது குறித்த இளைஞர்கள் குழு தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பித்த மாணவர்கள் தொழிநூட்ப கல்லூரி வளாகத்தினுள் நூழைந்துள்ளனர். அதன் போது குறித்த இளைஞர் குழு கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நெளுக்குளம் பொலிஸார் விரைந்த போது குறித்த இளைஞர் குழு மோட்டார் சைக்கிலில் தப்பித்து சென்ற முயன்றனர். இதன் போது பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

வவுனியா பலாமைக்கல் பகுதியில் இவ்வாறான இளைஞர்கள் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு

இச் செய்தி தமிழ்வின் இணையத்தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்ட செய்தி

 

You might also like