கிளிநொச்சியில் மதுபானத்துடன் ஒருவர் கைது: 7 நாட்கள் கட்டாய சமூக சேவை

கிளிநொச்சி – ஊரியான் பகுதியில் 3 ஆவது தடவையாகவும், மதுபானத்துடன் கைது செய்யப்பட்டவருக்கு 75,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், ஓருவார காலம் கட்டாய சமூக சேவையில் ஈடுப்படுமாறும் மன்று கட்டளையிட்டுள்ளது.

குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரியான் பகுதியில் ஏற்கனவே மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இரண்டு தடவைகள் நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டபோதும், நேற்று முன் தினம் 20 மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்த நபர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த நபருக்கு 75,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், சமூதாயம் சார் சீர் திருத்தகட்டளைச் சட்டத்தின் கீழ் 7 நாட்கள் கட்டாய சமூக சேவையில் ஈடுப்படுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like