வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பம் ( 2ம் இணைப்பு )

வவுனியாவில் இன்று(23.01.2017) காலை 9.30மணியளவில் கையளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமற்போன உறவினர்கள் ஒன்றினைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று(23.01.2017) காலை வவுனியா கந்தசாமி; ஆலயத்தில் ஒன்றினைந்த காணாமற்போன உறவுகள் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், பிரதான வீதிவழியாக ஊர்வலமாகச் சென்று, மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக தபால் நிலையத்திற்கு அருகில் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் உண்ணாவிரத போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

You might also like