வவுனியாவில் காதலை தெரிவித்த நபரின் வாகனத்தின் மீது கைக்குண்டு தாக்குதல் முயற்சி

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மகளின் காதலை தெரிவித்த நபரின் டிப்பர் வானத்தின் கீழ் நேற்று (08.10.2017) கைக்குண்டோன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நொச்சி மோட்டை புதிய சின்னக்குளம் பகுதியில் ஒரு மாணவியும் மாணவனும் கதைத்துக்கொண்டிருந்ததை அவதானித்த நபரோருவர் குறித்த மாணவியின் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்றையதினம் (08.10.2017) 50க்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து குறித்த நபரின் வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வீட்டினையும் சேதமாக்கி விட்டு அவரின் டிப்பர் வாகனத்தின் கீழ் கைக்குண்டோன்றை வீசி சென்றுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுடன் இன்றையதினம் குறித்த கைக்குண்டை செயளிழக்கும் நடவடிக்கையினை ஒமந்தை பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி :- வவுனியாவில் கடைக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம் : பொலிஸார் விசாரணை

You might also like