வவுனியாவில் பாடசாலை வகுப்பறை இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரை

வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் நேற்று (08.10.2017) இரவு இனந்தெரியாத நபர்களினால் பாடசாலை வகுப்பறை தொகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மேலும் தெரியவருகையில்

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இன்றையதினம் (09.10.2017) நடைபெறவுள்ள ஆசிரியர் தின நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நிலையில் நேற்று இரவு  பாடசாலையில் ஒலையினால் மேயப்பட்ட வகுப்பறை தொகுதியோன்றினை இனந்தெரியாத நபர்கள் தீக்கிறையாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் தீப்பற்றியேறிவதை அவதானித்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் ஈச்சங்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றையதினம் எமது பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம்பெறுமேன பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.

You might also like