வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் முதியோர் விழிப்புணர்வு செயற்றிட்டம்

வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் இன்று (09.10.2017)  காலை 7.30 மணிக்கு கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எம் .சீ .ரம்சீன் அவர்களின் தலைமையில் மாவட்ட சமூகசேவை அலுவலகத்தால் முதியோர் விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளம் தலைமுறையினர் மத்தியில் மூத்தோர் விழுமியங்களை கொண்டு செல்லும் வகையில் வவுனியா மாவட்டத்தில் சிறப்பான முறையில் பாடசாலை மட்டங்களில் இச்செயற்திட்டம் இடம்பெற்று வருகிறது.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் மூத்தோரை இளைய தலைமுறையினர் செவிமடுக்க வேண்டும் , அவர்களின் விழுமியப்பண்புகளைப் பேண வேண்டும் என்ற வகையில் ‘ கீரை இல்லாச்சோறும் கிழவி இல்லாவீடும் ‘என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .

தேசிய மீலாது நபி விழாவில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் , பரிசில்களும் நிகழ்வில் வழங்கப்பட்டன.

You might also like