வவுனியா வடக்கு நெடுங்கேனி மகா வித்தியாலயத்தில் மிதிவெடி மீட்பு

வவுனியா வடக்கு நெடுங்கேனி மகா வித்தியாலயத்தில் இன்று (09.10.2017) காலை 7.30மணியளவில் மிதிவெடியோன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலையின் சூழலில் மிதிவெடி போன்ற ஒரு பொருள் இருப்பதனை அவதானித்த பாடசாலை அதிபர் உடனடியாக நெடுங்கேனி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து உடனடியாக நெடுங்கேனி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையில் பாடசாலைக்கு சென்ற பொலிஸார் சந்தேகத்திற்கிடமான பொருளை பார்வையிட்டதுடன். மாணவர்கள் அப்பகுதிக்கு பிரவேசிக்காத வண்ணம் கயிற்றினை கட்டி விட்டு விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான பொருளை சோதனையிட்ட சமயத்தில் அப்பொருள் மிதிவெடியேன உறுதிப்படுத்தினார்கள்.

நாளையதினம் நீதிமன்றத்தின் உத்தரவுடன் மிதிவெடியினை செயளிழக்க வைக்கவுள்ளதாக நெடுங்கேனி பொலிஸார் தெரிவித்தனர்.

 

You might also like