யாழில் தாயை சித்திரவதை செய்து கொலை செய்தவர் கைது

யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்ட பகுதியில்  தாயை கடுமையாக தாக்கி கிணற்றில் தூக்கி வீசிய மகனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு தாக்கப்பட்டு கிணற்றி வீசப்பட்ட தாயரார் உயிரிழந்த நிலையிலே குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70  வயதான முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் முதியவர் இராசாவின் தோட்டதைச் சேர்ந்த செ.ரத்னாம்பிகை என தெரிவியவந்துள்ளது.

குறித்த முதியவர் மனநலம் குன்றியவர் எனவும், அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டதாக அயலவர்கள்  கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

 

You might also like