சற்றுமுன் விசுவமடு மகா வித்தியாலயத்தில் பதட்டம் : பாடசாலை மூடப்பட்டது

முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் இன்று (23.01.2017) மதியம் 12.15மணியளவில் குளவிக்கூடு கலைந்ததில் 20க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலத்தில் விஸ்வநாதன் ஆரம்ப வித்தியாலயத்திற்கும் இடையே காணப்படும் மரத்திலிருந்து குளவிக்கூட்டிலிருந்து தீடிரேன குளவிகள் கலைந்து பாடசாலை மாணவர்கள் , ஆசியர்களை தாக்கியுள்ளது . இதனால் 20க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் அன்புலன்ஸ் சேவை மூலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தியாலயம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

You might also like