கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியவர்களுக்கு தண்டப்பணம் விதித்த நீதிமன்றம்

கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய இருவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மணலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் உழவு இயந்திரத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய இருவரையும் கைது செய்து பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரத்தையும், மணலையும் பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையிலேயயே அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களுக்கு தலா முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மணல் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கடுமையான எச்சரிக்கையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like