வவுனியாவில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்ட உலக உளநல தினம்

‘ வேலை செய்யும் இடங்களில் மகிழ்ச்சிகரமான சூழலைத்தோற்றுவிப்போம் ‘ என்ற தொனிப் பொருளிலான 2017 ஆண்டு பன்னாட்டு உளநல தினம் இன்று (10.10.2017) வவுனியா உளநல சங்கத்தினால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர் .

அகிலாண்டேஸ்வரி அருளக மாணவர்களின் வரவேற்பு நடனம்  , உளநல சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சன்னசூரியா வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பிரதம விருந்தினராக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக உளநல வைத்திய நிபுணர் எஸ் சிவதாஸ் , பிராந்திய சுகாதார திணைக்கள உதவிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மகேந்திரன் வவுனியா பொது வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி கே.அகிலேந்திரன் , வடமாகாண சமூகசேவைகள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் , வடமாகாண சமூக வைத்திய நிபுணர் கேசவன் , வவுனியா வைத்திய அதிகாரி லவன் , செட்டிகுள ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் செந்தூர் பதிராஜா, வைத்தியர் மதுரகன் , வவுனியா தெற்கு கல்வி வலய பணிப்பாளர் எம்.இராதாகிருஸ்ணன், அருளக சிறுவர் இல்லப்பொறுப்பாளர் திரு நவரட்ணராஜா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தலைவர் திரு அகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

வவுனியா மகாவித்தியாலயம் , சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்ட ‘ சொல்லாடுகளம் ‘ இன்றைய இளைஞர்களின் தடுமாற்றத்திற்கு காரணம் – சமூக வலைத்தளங்கள் ? பாடசாலை சமூகம் மற்றும்; சூழல் ? மாறிவரும் குடும்பக்கட்டமைப்பு ? என்ற தலைப்பில் இடம்பெற்றது.

நிகழ்வின் சிறப்பம்சமாக வைத்திய நிபுணர் எஸ்.சிவதாஸ் அவர்கள் எழுதிய ‘ சிறுவர்களுடன்’ என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

நூலை பிரதம விருந்தினர் வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் வழங்க அகிலாண்டேஸ்வரி ஆலய செயலாளர் திரு.நவரட்ணராஜா பிரதியை பெற்றுக்கொண்டார் .

நூலின் நயவுரையை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் நிகழ்த்தினார் .

அருளக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like