வவுனியா வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவன்

வவுனியா வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் மஹ்பூப் யூஸசப் முப்தி சில வாரங்களுக்கு முன் வெளியாகிய புலமைப்பரிட்சையில் 170 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.பி.கணேஸ் தெரிவித்தார்.

இம் மாணவன் விளையாட்டுத்துறை என பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் குறித்த வகுப்பாசிரியரான டொல்றோசா குரூஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

You might also like