வவுனியா தபால் நிலைய ஊழியருக்கு ஜனாதிபதியின் கைகளால் கிடைத்த விருது

வடக்கு மாகாணத்தில் அதிக வருமானம் சேர்த்ததால் அஞ்சல் சேவையாளராக வவுனியா தபால் நிலைய ஊழியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொலன்நறுவையில் கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய உலக அஞ்சல் தின நிகழ்வின் போது அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவருக்கு ஜனாதிபதி விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

வவுனியா தபாலகத்தில் கடமையாற்றும் எஸ்.மனோகரன் என்ற தபால் உத்தியோகத்தரே வடக்கு மாகாண மட்டத்தில் சிறந்த அஞ்சல் சேவையாளராக தெரிவு செய்யப்பட்டு முதல் நிலை விருதை பெற்றுள்ளார்.

You might also like