வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இன்று மதியம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பயணி ஒருவரின் பொதியை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, 915 கிராம் கஞ்சாவினை சட்டவிரோதமாக கொண்டு செல்லமுற்பட்ட குற்றச்சாட்டுக்காக த்தளத்தை சேர்ந்த அபிலசன் றிஸ்வான் (வயது 37) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like