கிளிநொச்சியில் 35 மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிய பொலிஸார்

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களுக்கு பொலிஸாரால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like